16 September 2006

சிறுபத்திரிகை

மீண்டும் புனைகளம்


2007 ஜனவரி முதல் 'புனைகளம்' இதழ் மீண்டும் வெளிவர இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த 'சிலேட்' இதழில் சி. மோகன் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"சிறு பத்திரிகை இயக்கம் அதன் சுழற்சியில் ஒரு இருண்ட கட்டத்தை அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இது ஒரு தறகாலிக ஸ்திதியே தவிர வேறில்லை. மீட்சிக்கான பாதைகளில் எந்த ஒன்றையும் இழந்து போக நாம் விட்டுவிட மாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப் புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்றைய கலை இலக்கிய வியாபாரச் சந்தை கொழித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய தலைமுறைகளின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பை ஆதாய முதலாக்கி வியாபாரம் கன ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சந்தை வியாபாரிகள் தங்கள் யானைக் கால்களால் பாதையை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊதிப் பெருத்து கரடு தட்டி விகாரமான யானைக் கால்களைப் புறக்கணித்துவிட்டோ, உதைத்துத் தள்ளிவிட்டோ தொடரும் நம்பிக்கைகுரிய பயணங்களில் ஒன்றாகப் புனைகளம் அமையும்" என்று சி. மோகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

3 comments:

மஞ்சூர் ராசா said...

அருமையான பல பேட்டிகள், கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் தமிழ் வாசகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் உங்களின் படைப்புகளை வலைப்பதிவுலகில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

ரவி சுப்ரமணியம் தமிழிலேயே அழகாக எழுதியிருக்கலாமே. ஏன் ஆங்கிலத்தில் தமிழை கடித்து குதறியிருக்கிறார்?

a.rajaramkumar@gmail.com said...

அடிக்கடி புதிய விஷயங்கள் பதிப்பிக்கப்படாமல் உங்கள் வலைப்பதிப்பு மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறதே! ரொம்ப பிசியோ? ஜங்ஷனில வந்த பேட்டிகளை பதிப்பித்தாலே பிரமாதமாக இருக்குமே!