05 November 2008

ஆல்பம்


சந்திப்பு


சென்னை இலக்கியச் சந்திப்புகளில், அதன் பிறகு இன்று வரை அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று பெருமைகொள்ளும் விதமான ஒரு அபூர்வமான நிகழ்வு இது. சி.எல்.எஸ். அமைப்பு சென்னையில் நடத்திய இந்திய எழுத்தாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருக்கிறது. முதல் வரிசையில்; வெள்ளை வேஷ்டி சட்டையில் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்: க.நா. சுப்பிரமணியம்; நான்காவதாக நிற்பவர்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்; அடுத்து நடுவில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் ஆர்.கே. நாராயண், கருப்பு கோட்டுடன் நிற்பவர்: ஆங்கில எழுத்தாளர் ராஜாராவ்; இரண்டாவது வரிசையில்: இடதுபக்கம் இருந்து இரண்டாவதாக நிற்பவர்: சிவபாதசுந்தரம்; மூன்றாவது வரிசையில்: இரண்டாவது நிற்பவர்: சி.சு. செல்லப்பா. மற்றவர்கள் தெரியவில்லை. யாராவது, தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

3 comments:

Bee'morgan said...

எனக்கும் எதுவும் தெரியலீங்க.. கூடவே ஒரு சின்ன தகவல்.. உங்களின் profile ல் ”ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்” என்று உள்ளது. பாக்காம விட்டுட்டீங்க பாருங்க..

பாரதி மணி said...

இந்தப்புகைப்படத்தை கநாசுவிடம் பார்த்திருக்கிறேன். நடுவில் கையை கட்டிக்கொண்டிருப்பவர் பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயண். ஆங்கில எழுத்தாளர் பெயர் ராஜா ராவ்... ராஜாராம் அல்ல.

பாரதி மணி

குப்பன்.யாஹூ said...

nice one, thanks for sharing, came to your blog from Jeyamoanh's blog