18 September 2008

தொடர் - அறிமுகம்


உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்

ராஜகோபால்
தளவாய் சுந்தரம்

"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது."
- பாஸ்க்கால்

பாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். "அவனொரு ஒநாய்; டிராகுலா!", "அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு!" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.

முதலில்... டிராகுலா!

(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)

3 comments:

Dr.Rudhran said...

waiting for the blog

வலையப்பன் said...

தளவாய் எப்படியிருக்கீங்க.. 'என்னை பற்றி" தலைப்பில் ஒரு வலைப்பதிவே போடலாம் போல‌... செல்வேந்திரன் உங்களை பத்தி எழுதுன மேட்டரை படிச்சீங்களா

நா.இரமேஷ் குமார் said...

தளவாய் எப்படியிருக்கீங்க.. ?