28 March 2009

படித்ததில் பிடித்தது


தாவோ தேஜிங்
லாலோ ட்சு
தமிழில்: சி.மணி


அழகாயிருப்பது ஆழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.
நன்மையை நன்மை என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
தீமை தோன்றுகிறது.

எனவே, இருத்தல்
இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது
எளிமை
கடினத்தைத் தோற்றுவிக்கிறது.
நீட்டத்திலிருந்து
குறுக்கத்தைப் பெறுகிறோம்,
அளவை வைத்து;
உயரத்திலிருந்து
பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,
இடத்தை வைத்து;
ஒலியதிர்வு
ஒலியை இசைவுபடுத்துகிறது;
இவ்வாறு,பின்னது
முன்னதைத் தொடர்கிறது.

எனவே, ஞானி
தன் பணியைத் தொடர்கிறான்
செயல்படாமையை மேற்கொண்டு;
எனவே, அவன் தன் போதனைகளைப்
போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்.

(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்' புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)

4 comments:

மண்குதிரை said...

//அழகாயிருப்பது ஆழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.//
//எனவே, ஞானி
தன் பணியைத் தொடர்கிறான்
செயல்படாமையை மேற்கொண்டு;
எனவே, அவன் தன் போதனைகளைப்
போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்.//

ரசித்தேன்.

பகிர்வுக்கு என் நன்றி.

யாத்ரா said...

பல அதிர்வுகளை எனக்குள் ஏற்படுத்திய இக்கவிதையை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி, தாவோ தேஜிங், சி.மணி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

goma said...

”பள்ளமே இல்லாதிருந்தால் ஊற்றெடுத்த சுனை நீர் என்ன ஆகும்,....


‘இது என் அடுத்த கவிதையின் முதல் வரி....
எடுத்துக் கொடுத்த தாவோ தேஜிங்க்கு நன்றி